adsby
random

சனி, 10 பிப்ரவரி, 2018

நீட் விண்ணப்பம் தொடங்கியது ஆதார் கட்டாயம்

நீட் விண்ணப்பம் தொடங்கியது : ஆதார் கட்டாயம் by kalviseithi 
எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புக்கான, நீட் நுழைவுத்தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மார்ச் 9ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். தமிழகத்தில், 10 தேர்வு மையங்களில் தேர்வு நடைபெறுகிறது.
பிளஸ் 2 முடிக்கும் மாணவர்கள், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளில் சேர, &'நீட்&' தேர்வில், கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும். &'எய்ம்ஸ்&' மற்றும், &'ஜிப்மர்&' மருத்துவ கல்லுாரிகளுக்கு மட்டும், தனி நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது.

மேலும் படிக்க : குரூப் 4 எக்ஸாம் 

இந்த ஆண்டுக்கான, &'நீட்&' தேர்வு குறித்த அறிவிக்கையை, மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., நேற்று அதிகாரபூர்வமாக வெளியிட்டது. மே, 6ல், &'நீட்&' தேர்வு நடக்கிறது. இதற்கான, ஆன்லைன் பதிவு, http://cbseneet.nic.in என்ற, இணையதளத்தில், நேற்று காலை, 7:00 மணிக்கு பின், துவங்கியது; மார்ச், 9 நள்ளிரவு, 11:30 மணி வரை விண்ணப்பிக்கலாம். 

நீட் விண்ணப்பம் தொடங்கியது ஆதார் கட்டாயம்


விண்ணப்ப பதிவு துவங்கிய ஒரு மணி நேரத்திற்குள், இணையதளம் முடங்கியது. பின், படிப்படியாக இயல்பு நிலைக்கு வந்தது. நேற்று இரவு, 7:00 மணி வரையிலான, 12 மணி நேரத்தில், 16 லட்சம் பேர் இணையதளத்தை பார்வையிட்டுள்ளனர்.


* பொதுப்பிரிவினர், பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு, 1,400 ரூபாயும், மற்ற இனத்தவர் மற்றும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு, 750 ரூபாயும், தேர்வு கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. மார்ச், 10 நள்ளிரவு, 11:30 மணிக்குள், கட்டணத்தை செலுத்த வேண்டும்.

* சுயநிதி பல்கலை, கல்லுாரிகள், அரசு மற்றும் தனியார் ஒதுக்கீடு இடங்கள், மத்திய பல்கலைகள், கல்லுாரிகள், மத்திய ஒதுக்கீட்டு இடங்கள், வெளிநாடு வாழ் தமிழர்களுக்கான இடங்கள் என, அனைத்திற்கும், &'நீட்&' தேர்வின்படியே, மருத்துவ மாணவர் சேர்க்கை நடத்தப்படும்.

மேலும் படிக்க : வேலை வாய்ப்பு 

* ஆந்திரா, தெலுங்கானா அரசுகளின் கல்லுாரிகள் மற்றும் பல்கலைகளில், 15 சதவீத இடங்கள், இந்த ஆண்டு முதல், மத்திய அரசு ஒதுக்கீட்டில் நிரப்பப்பட உள்ளன; அதற்கும், &'நீட்&' தேர்ச்சி அடைய வேண்டும்.

* தேர்வுக்கு விண்ணப்பிக்க, &'ஆதார்&' கட்டாயம் தேவை. வெளிநாடு வாழ் தமிழர்கள், இந்தியாவை பூர்வீகமாக கொண்ட வெளிநாட்டினருக்கு, &'பாஸ்போர்ட்&' எண் கட்டாயம் வேண்டும்.


* பொதுப்பிரிவினர், 1993 மே, 7 முதல், 2002 ஜன., 1க்குள் பிறந்திருக்க வேண்டும். மற்ற பிரிவினர், மாற்றுத்திறனாளிகள், 1988 மே, 7 முதல், 2002 ஜன., 1க்குள் பிறந்திருக்க வேண்டும். அதாவது, 2018 டிசம்பருக்குள், மாணவருக்கு, 17 வயது பூர்த்தியாகி இருக்க வேண்டும்

* இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் அல்லது உயிரியல் அல்லது உயிரி தொழில்நுட்பவியலான, &'பயோடெக்னாலஜி&' பிரிவுகளில் படித்திருக்க வேண்டும். பொது பிரிவினர், 50 சதவீதம்; மாற்றுத்திறனாளி பொது பிரிவினர், 45 சதவீதம்; மற்ற பிரிவினர், 40 சதவீதமும், பிளஸ் 2 தேர்வில் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். என்.ஐ.ஓ.எஸ்., திறந்தநிலை பள்ளியில் படித்தவர்கள், தனித்தேர்வர்கள், &'நீட்&' தேர்வில் பங்கேற்க முடியாது.

* காலை, 10:00 மணி முதல், பகல், 1:00 மணி வரை தேர்வு நடக்கும். கொள்குறி என்ற, &'அப்ஜெக்டிவ்&' வகையில், 180 வினாக்கள் இடம் பெறும்.

* சென்னை, கோவை, காஞ்சிபுரம், மதுரை, சேலம், திருச்சி, திருநெல்வேலி, நாமக்கல், திருவள்ளூர், வேலுார் என, 10 இடங்களில் தேர்வு மையங்கள் அமைகின்றன.

மேலும் படிக்க : அரசு பள்ளிகளில் கேமரா 

நீட்மதிப்பெண் மட்டுமே!
&'நீட்&' தேர்வு மதிப்பெண் அடிப்படையில், தரவரிசை பட்டியல் வெளியாகும். பட்டியலில் உள்ள, &'நீட்&' தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மட்டுமே, அனைத்து மாநிலங்களிலும், மருத்துவப் படிப்புக்கான சேர்க்கை நடத்தப்படும். அந்தந்த மாநிலங்களில், ஏற்கனவே பின்பற்றும் இட ஒதுக்கீடு உள்ளிட்ட மற்ற தகுதிகளை பின்பற்ற, எந்த தடையும் இல்லை. &'நீட்&' தேர்வு குறித்த சந்தேகங்களுக்கு, 9773720177, 9773720178 மற்றும் 9773720179 என்ற, எண்களிலும், neet.cbse@nic.in என்ற, இ - மெயில் முகவரியிலும் தொடர்பு கொள்ளலாம். பள்ளிக் கல்வித்துறை சார்பில், நீட் பதிவுக்கான இலவச உதவி மையம் அமைக்க வேண்டும் என்ற, கோரிக்கை எழுந்துள்ளது.

மேலும் படிக்க : பிஇ வேலை குறைவு 

தமிழக பட்டியலில் தெலுங்கானா!
நாடு முழுவதும், 150 தேர்வு மையங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. மஹாராஷ்டிர மாநிலத்தில், அதிகபட்சமாக, 17 மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. உத்தர பிரதேசத்தில், 11; ஆந்திரா, குஜராத், கர்நாடக மாநிலங்களுக்கு, தலா, ஒன்பது தேர்வு மையங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. தெலுங்கானாவுக்கு என, இரண்டு தேர்வு மையங்கள் மட்டுமே, பட்டியலில் உள்ளன. அது தவிர, தெலுங்கானா மாநிலத்தில் உள்ள கம்மம் மற்றும் ரெங்கா ரெட்டி என்ற பகுதிகள், தமிழக பட்டியலில் இடம்பெற்றுள்ளன. அதனால், தமிழகத்திற்கு, 12 தேர்வு மையங்கள் காட்டப்பட்டுள்ளன. எனவே, தமிழக மாணவர்கள் பலர், தெலுங்கானா பகுதிகளில், தேர்வு மையம் அமைக்கப்படுமா அல்லது தெலுங்கானா பகுதியை, தவறாக தமிழக பட்டியலில் குறிப்பிட்டுள்ளனரா என, குழப்பம் அடைந்துள்ளனர்.

மேலும் படிக்க : 80 லட்சம் பேருக்கு வேலை 

0 comments:

கருத்துரையிடுக