சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு கணித பாடத்துக்கு மறுதேர்வு இல்லை: மத்திய அரசு

சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு கணித பாடத்துக்கு மறுதேர்வு நடத்துவதில்லை என்று மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து தில்லியில் மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்திலுள்ள கல்வித் துறை செயலர் அணில் ஸ்வரூப் கூறுகையில், 'சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு கணித பாட தேர்வுக்கான வினாத்தாள் கசிந்தது தொடர்பான செய்திகள் வெளியானதால் ஏற்படும் பாதிப்பை மதிப்பீடு செய்தும், தேர்வு எழுதிய மாணவர்களின் நலன்களை கவனத்தில் கொண்டும், அந்த பாடத்துக்கு மறுதேர்வு நடத்துவதில்லை என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது. தில்லி, ஹரியாணா மாநிலங்களிலும் மறுதேர்வு நடத்தப்பட மாட்டாது' என்றார்.
இதைத் தொடர்ந்து சிபிஎஸ்இ அமைப்பு வெளியிட்ட அறிவிக்கையில், '12ஆம் வகுப்புக்கான முக்கிய நுழைவு வாயிலாக 10ஆம் வகுப்பு தேர்வு திகழ்கிறது; பள்ளிக் கல்வியில் முக்கிய அம்சமாக 10ஆம் வகுப்பு தொடர்ந்து இருக்கும்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு கணித பாடத்துக்கு மறுதேர்வு இல்லை: மத்திய அரசு

சிபிஎஸ்இ அமைப்பால் நடத்தப்பட்ட 12ஆம் வகுப்பு பொருளியல் பாடத் தேர்வுக்கான வினாத்தாளும், 10ஆம் வகுப்பு கணித பாடத் தேர்வுக்கான வினாத்தாளும் கசிந்ததாக செய்திகள் வெளியாகின. இதுகுறித்து துறை ரீதியிலான விசாரணைக்கு மத்திய அரசு உத்தரவிட்டது.
சிபிஎஸ்இ அமைப்பின் புகாரின்பேரில், பல்வேறு மாநிலங்களிலும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. தில்லியில் தனியார் பள்ளி ஆசிரியர்கள் 2 பேர் உள்பட 3 பேர் அண்மையில் கைது செய்யப்பட்டனர்.

Share this:

Disqus Comments