மேலாண்மை படிப்புகளுக்கான 'ஜி-மேட்' தேர்வு நேரம் குறைப்பு

மேலாண்மை பட்டப் படிப்புகளில் சேருவதற்காக சர்வதேச அளவில் நடத்தப்படும் 'ஜி-மேட்' தேர்வுக்கான நேரம், 30 நிமிடங்கள் குறைக்கப்படுவதாக மேலாண்மை பட்டப் படிப்புகளுக்கான சேர்க்கை கவுன்சில் (ஜிமேக்) தெரிவித்துள்ளது.
உலகின் முன்னணி வணிக கல்வி நிறுவனங்களில் சேருவதற்கு 'ஜி-மேட்' தேர்வின் மதிப்பெண்கள் முக்கியமாக கருதப்படுகிறது. இந்தியாவில் உள்ள புகழ்பெற்ற வணிக கல்வி நிறுவனங்களும் ஜி-மேட் தேர்வின் மதிப்பெண்களை ஏற்றுக் கொள்கின்றன.
மேலாண்மை படிப்புகளுக்கான 'ஜி-மேட்' தேர்வு நேரம் குறைப்பு

கணினி வழியில் நடத்தப்படும் இத்தேர்வின் கால அளவு 4 மணி நேரத்தில் இருந்து மூன்றரை மணி நேரமாக குறைக்கப்படுவதாக தேர்வை நடத்தும் 'ஜிமேக்' அமைப்பு தெரிவித்துள்ளது. ஏப்ரல் 16-ஆம் தேதி முதல் புதிய கால அளவு செயல்பாட்டுக்கு வரும்; தேர்வுக்கான கால அளவு குறைக்கப்பட்டாலும், தேர்வின் சாராம்சம், கேள்விகளின் பாணி உள்ளிட்டவற்றில் எந்த மாற்றமும் இல்லை. இந்த நடவடிக்கையால், ஜி-மேட் தேர்வின் தரம் உள்ளிட்ட இதர அம்சங்களில் எந்த குறைவும் ஏற்படாது என்று ஜிமேக் தெரிவித்துள்ளது.
உலக அளவில் 223 வணிகப் படிப்பு நிறுவனங்கள் இணைந்த லாப நோக்கமற்ற அமைப்பு ஜிமேக் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this:

Disqus Comments