டிப்ளமோ முடித்தவர்களா நீங்கள்..? பகுதி நேர பிஇ படிக்க விண்ணப்பிக்கலாம்!

சென்னை: பொறியியல் துறையில் பட்டயம் (டிப்ளமோ) பெற்று பணியாற்றி வருபவர்கள் பகுதி நேரமாக பிஇ பொறியியல் படிக்க விண்ணப்பிக்கலாம் என தமிழக தொழில்நுட்ப கல்வி இயக்ககம் அறிவிக்கை வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து தமிழக தொழில்நுட்ப கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பொறியில் துறையில் பட்டய படிப்பை முடித்து பணிபுரிந்து வருபவர்கள் தமிழகத்தில் உள்ள 6 அரசு பொறியியல் கல்லூரிகள் மற்றும் 3 அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகளில் பகுதி நேரமாக பொறியியல் படிக்க விண்ணப்பிக்கலாம் என தெரிவித்துள்ளது. 
டிப்ளமோ முடித்தவர்களா நீங்கள்..? பகுதி நேர பிஇ படிக்க விண்ணப்பிக்கலாம்!

இதற்கு www.ptbe-tnea.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். நாளை வியாழக்கிழமை (ஏப் 5 முதல் மே 10) வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். ஆன்லைன் மூலமாக விண்ணப்பித்த பின்னர் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து அதனுடன் உரிய ஆவணங்கள் மற்றும் பதிவுக்கட்டணத்துடன் கோவை தொழில்நுட்ப கல்லூரி முகவரிக்கு அனுப்பிவைக்க வேண்டும்.
விண்ணப்ப கட்டணமாக ரூ.600 செலுத்த வேண்டும். ஆதி திராவிடர்கள் மற்றும் பழங்குடியின பிரிவினர் ரூ.300 கட்டணமாக செலுத்த வேண்டும் என அந்த அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share this:

Disqus Comments